கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

Advertisment

இதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே வாகனங்களில் சுற்றிய 1,64,357 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,29,705 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூபாய் 61,29,744 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

tamilnadu curfew police vehicles seizures

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து விதிகளை மீறியதாக 1,52,520 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக சென்னை மாநகரில் ஒரே நாளில்தடையை மீறி வெளியே சுற்றிய 1,369 பைக்குகள் உள்பட 1,661 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல் ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதால் 150- க்கும் மேற்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.