கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாகப் பிரதமர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியதாக இதுவரை 2,85,150 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,39,770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வாகன ஓட்டிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதம் ரூபாய் 1.49 கோடியிலிருந்து ரூபாய் 2.68 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக ஒரே நாளில் மட்டும் சுமார் 1.22 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் விதிகளை மீறியதாக இதுவரை 2,68,537 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.