கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 144 தடையை மீறி வெளியே சுற்றியதாக நேற்று (25/03/2020) மட்டும் 1,252 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
அதில் திருச்சி மாவட்டத்தில் 70 வழக்குகளும், மாநகரில் 25 வழக்குகளும் காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடியில் 5 கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளதாக தகவல் கூறுகின்றன. அதேபோல் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் இரு சக்கர வாகனத்தில் சுற்றி திரிந்த 25 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுரத்தில் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருவாரூரில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் வெளியே சுற்றியதாக 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னையில் தடை உத்தரவை மீறிய 5 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.