Advertisment

தமிழகத்தில் 4,000- க்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு!

tamilnadu coronavirus update for today

தமிழகத்தில் மேலும் 3,867 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் 3,865 பேருக்கும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 2 பேருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 1,57,791 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒரு நாள் பாதிப்பு 3,867 ஆக உள்ளது.

Advertisment

கரோனாவால் மேலும் 72 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,005 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 54 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 35,294 ஆக உள்ளது. கரோனாவில் இருந்து மேலும் 4,382 பேர் குணமடைந்த நிலையில் இது வரை 24,27,988 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Advertisment

தமிழகத்தில் 44 ஆவது நாளாக ஒருநாள் கரோனா மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

coronavirus state health department Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe