தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில்இதுவரை மூன்று பேர் குணமடைந்துள்ளனர்.
மூன்றாவது நபராக அயர்லாந்தில் இருந்து வந்த 21 வயதான இளைஞர் குணமடைந்துள்ளார். இதையடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் அடுத்த 14 நாட்களுக்கு அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலைத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிப்படுத்தியுள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
ஏற்கனவே ஓமனில் இருந்து வந்த காஞ்சிபுரம் பொறியாளர், டெல்லியில் இருந்து வந்த இளைஞர் குணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 38 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த 38 பேரில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.