
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (27/05/2021) ஆலோசனை நடத்துகிறார்.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (27/05/2021) காலை 11.00 மணிக்கு முதல்வர் தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள், பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது, தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டிப்பது, கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.