தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 லிருந்து 35 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

இதனைமாநில சுகாதாரத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகஅறிவித்துள்ளது. அதில் "தமிழகத்தில் புதிதாக ஆறு பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை, ஈரோடு, சென்னையை சேர்ந்த தலா 2 பேருக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

Advertisment

tamilnadu coronavirus positive increased 35 th

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மதுரையில் கரோனா பாதிப்பால் இறந்த நபரின் குடும்பத்தினர் இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல் தாய்லாந்தில் இருந்து ஈரோடு வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 2 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

சென்னையில் ஏற்கனவே கரோனா உறுதியானவருடன் தொடர்பில் இருந்தவருக்கும், 25 வயதான சென்னை பெண்ணுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பெண்ணுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது." இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

இந்த 35 பேரில் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில், ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.