தமிழகத்தில் ஊரடங்கு விதியை மீறி ஊர் சுற்றியவர்களிடம் ரூபாய் 21.33 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறிய 6.92 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஊரடங்கு தடையை மீறி வாகனங்களில் சுற்றிய 9.88 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகத்தில் இதுவரை 8.94 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.