tamilnadu coronavirus lockdown doctors expert team cm palanisamy discussion

சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில்

Advertisment

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரச்செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Advertisment

சென்னையில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு உள்ளிட்டவை குறித்து மருத்துவ நிபுணர் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை செய்து வருகிறார். மேலும் நாளை மறுநாள் (17/06/2020) பிரதமருடன் ஆலோசனை நடக்க உள்ள நிலையில் மருத்துவக் குழுவினரின் கருத்துகளை கேட்கிறார்.

மருத்துவ நிபுணர் குழு உடனான ஆலோசனைக்குப் பிறகு தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

தமிழக அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.