தமிழகத்தில் கரோனா பரிசோதனைக்கு மேலும் ஆறு ஆய்வங்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. கன்னியாகுமரி, தஞ்சை, வேலூர், கோவை உள்ளிட்ட ஆறு இடங்களில் ஆய்வகங்கள் அமையவுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு ஏப்ரல் 15- ஆம் தேதி கரோனா பரிசோதனை கருவிகள் வரும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.