தமிழகத்தில் மேலும் 600 பேருக்கு கரோனா! 6,000-ஐ தாண்டியது கரோனா பாதிப்பு!

tamilnadu corona virus updates- april8

இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு பிறப்பித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வரும் நிலையிலும், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பது அரசுகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று மேலும் 600 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக பாதிப்பு எண்ணிக்கை 6009 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் கரோனா பாதிப்பால் இன்று 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்தில் கரோனா பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இன்று கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட 600 பேரில், 399 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சென்னையில் 2,644 லிருந்து 3,043 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,605 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதையடுத்து, குணமடைந்தோர் விகிதம் 26.7% ஆக உள்ளது என அவர் தெரிவித்தார்.

corona virus covid 19 Tamilnadu vijayabaskar
இதையும் படியுங்கள்
Subscribe