Advertisment

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கரோனா உறுதி! எண்ணிக்கை உயர்வுக்கான காரணத்தை சொன்ன சுகாதாரத்துறை!!!

Tamilnadu corona virus updates - April6

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமலில் இருந்த ஊரடங்கு, தற்போது மே 17- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கில் சில தளர்வுகள் மே 4- ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து தமிழகத்திலும் ஊரடங்கில் சில தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று மட்டும் 771 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 68 வயது ஆண், 59 வயது பெண் என இருவர் இன்று உயிரிழந்ததையடுத்து கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3,320 ஆண்களுக்கும், 1,507 பெண்களுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2 திருநங்கைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோயம்பேடு சந்தை தொடர்பால் இன்றும் அதிக நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பிலிருந்து இன்று 31 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 1,516 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும், 13,413 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைகள் அதிகமாக செய்யப்படுவதால், பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tamilnadu covid 19 corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe