இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு பிறப்பித்து முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வரும் நிலையிலும், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பது அரசுகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
இந்நிலையில் இன்று மேலும் 508 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் பாதிப்பு எண்ணிக்கை 4,058 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 279 பேருக்கும், கடலூரில் 68 பேருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது என்றும், இன்று 76 பேர் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,485 உயர்ந்துள்ளது என்றும், இன்று அதிகபட்சமான தொற்றுக்குக் காரணம் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையது என பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.