இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், தமிழகத்திலும் வேகமாகபரவி வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டிருந்த நாடுதழுவிய 3- ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு நேற்றுடன் முடிவுக்கு வரவிருந்த நிலையில், ஊரடங்கை மே 31 ஆம் தேதி வரை மீண்டும் மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஊரடங்கு நீட்டித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைதீவிரப்படுத்தி வரும் நிலையிலும், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பது அரசுகளுக்குபெரும் சவாலாக அமைந்துள்ளது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
இந்நிலையில் தமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,760 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து அதிகபட்சமாகசென்னையில் இன்று 364 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை சென்னையில் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 7,114 ஆக உள்ளது. தமிழகத்தில் கரோனாவால் இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 78 லிருந்து 81 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து 234 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதையடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கையும் 4,406 ஆக உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு விகிதம் குறைவான அளவிலேயே உள்ளது. கரோனா பாதிப்பை கண்டு மக்கள் பதற்றமடையவோ, பீதியடையவோ வேண்டாம் என்று மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.