உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இருந்தபோதிலும் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 Tamilnadu corona virus updates - April 23

Advertisment

இதற்கிடையில் மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, கரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் ஊரடங்கைதளர்வு செய்ய மத்திய அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு குறித்து முடிவு எடுக்க குழு அமைத்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 54 பேருக்கு கரோனா பாதிப்பு இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தமிழகத்தில் 1,683 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும்24 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சென்னையில் 400ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 90 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 752ஆக அதிகரித்துள்ளது.