Tamilnadu corona virus updates-April 17

இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டிருந்த நாடுதழுவிய 3- ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவுக்கு வரவிருந்த நிலையில், ஊரடங்கை மே 31 ஆம் தேதி வரை மீண்டும் மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஊரடங்கு நீட்டித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வரும் நிலையிலும், கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பது அரசுகளுக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது.

Advertisment

Advertisment

இந்நிலையில் தமிழகத்தில் இன்று மேலும் 639 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,224 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் இன்று 482 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கரோனாவால் இன்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து 634 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதையடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கையும் 4,172 ஆக உயர்ந்துள்ளது.