கரோனா வைரஸ் இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்புக்கு இதுவரை முறையான மருந்து கண்டுபிடிக்கப்படாததால், அதைகட்டுப்படுத்துவது எப்படி என்று தெரியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான ஒரே வழி சமூக விலகல் என்பதால் அனைத்து நாடுகளும் மக்களிடம் அதையே வலியுறுத்தி வருகின்றன. இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் தமிழகத்திலும் வேகமாகபரவி வருகிறது.

tamilnadu corona virus updates

Advertisment

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "தமிழகத்தில் இதுவரை 46,985 கரோனா தொற்று மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று மட்டும் அதிகபட்சமாக 6,109 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 41,710 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு எடுத்த 6,109 பேரில் புதிதாக 43 பேருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 1,520 ஆக அதிகரித்துள்ளது.

 nakkheeran app

இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் முதல்முறையாக ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சி மற்றும் தென்காசியில் தலா நால்வருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 46. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 457. இன்று கரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் உள்பட இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு 17 ஆக அதிகரித்துள்ளது" என்று தெரிவித்தார்.

Advertisment