Tamilnadu corona virus impact- CM edappadi palanisamy press meet

தமிழகத்தில் கரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, சென்னையில் மண்டலவாரியாக கரோனா தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கரோனா பரவலைதடுக்க 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களைகாட்டிலும் தமிழகத்தில் கரோனா பரவலைதடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிகமான மக்கள் நிறைந்த நகரம் சென்னை என்பதால் நோய்தொற்று அதிகரித்துள்ளது. கரோனா தாக்கத்தால் தடை செய்யப்பட்ட பகுதிகளில் நேரடியாக காய்கறிகள் கொண்டு சேர்க்கப்பட்டு வருகின்றன.

Advertisment

மேலும் சென்னையில் மட்டும் 4,000 படுக்கைகள் வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக உரிய மருந்துகள் அளிக்கப்படுகிறது. அத்துடன் கபசுர குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, சில தொழில்கள் தொடங்குவதற்கு கட்டுப்பாடுகள், தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் நடமாடும் பரிசோதனை வாகனம் மக்கள் இருக்கும் இடத்துக்கே செல்கிறது.

Advertisment

அம்மா உணவகங்களில் நாள் ஒன்றுக்கு 7 லட்சம் பேருக்கு உணவு அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் எவரும் பட்டினி இல்லை என்ற நிலையை அதிமுக அரசு உருவாக்கியுள்ளது. மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாக அரிசி, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன,ஜூன் மாதமும் இலவசமாக வழங்கப்படும். அரசு அறிவிக்கும் வழிமுறைகளைபின்பற்ற வேண்டும் என்று கைகளைகூப்பிக் கேட்டுக் கொள்கிறேன். கண்ணை இமை காப்பதைப் போல் மக்களை அரசு காத்து வருகிறது" என தெரிவித்தார்.