தமிழக கரோனா பாதிப்பு... இன்றைய நிலவரம்...

tamilnadu corona update

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்திலிருந்து வருகின்றது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது தினமும் உயர்ந்த வண்ணம் இருந்து வருகின்றது.

அந்தவகையில் இன்றைய நிலவரப்படி, கடந்த 24 மணிநேரத்தில், தமிழகத்தில் 5,890 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,26,245 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கரோனாவால் 117 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இன்று 5,556 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்தனர். இதன்மூலம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,67,015 ஆக உயர்ந்துள்ளது.

corona virus
இதையும் படியுங்கள்
Subscribe