கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும்பொதுமுடக்கம்அமலில் உள்ளது. தமிழகத்திலும் மே 31-ஆம் தேதி வரை பொதுமுடக்கம்அமலில் உள்ளது.தமிழகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும்மொத்தம் 9,364 பேர் இதுவரை கரோனாபாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் தமிழகத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 5740 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக ஏடிஜிபி ரவிதெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், குடும்ப வன்முறை தொடர்பாக 5,702 புகார்கள் விசாரணைக்கு வந்துள்ளது. அதிகபட்சமாக புதுக்கோட்டை 1,424 புகார்களும்,நெல்லையில்705 புகார்களும் வந்துள்ளது. இது தொடர்பாக 38 வழக்குகள்பதிவு செய்து கைதுநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.