tamilnadu congress party mlas meeting

Advertisment

தமிழக காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவரைத் தேர்வு செய்ய நாளை (17/05/2021) காலை மீண்டும் கூடுகிறது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டுராவ், மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.

கூட்டத்தில் 18 சட்டமன்ற உறுப்பினர்களிடம் வாக்குக்கெடுப்பு நடத்தி அதை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைக்க தமிழக காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் கூறுகின்றன.

காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் பொறுப்புக்கு விஜயதாரணி, செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

Advertisment

விடுதலைச் சிறுத்தைகள், பா.ஜ.க., பா.ம.க., உள்ளிட்டக் கட்சிகள் ஏற்கனவே சட்டமன்றக் குழு தலைவரைத் தேர்வு செய்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இழுபறி நீடிக்கிறது.தமிழக சட்டமன்றத்தில் அதிக சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மூன்றாவது பெரிய கட்சி காங்கிரஸ் என்பது குறிப்பிடத்தக்கது.