Advertisment

எச். வசந்தகுமாரின் மணிமண்டபத்தை திறந்துவைத்த காங்கிரஸ் தலைவர்!

Advertisment

pic_2.jpg

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமாரின் முதலாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, நேற்று (28.08.2021) சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisment

இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் நிறுவப்பட்டுள்ளவசந்தகுமார் மணி மண்டபத்தையும் அவரது சிலையையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி திறந்துவைத்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட மறைந்த வசந்தகுமாரின் மகனும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த், “எனது தந்தை திரு H. வசந்த குமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு நடைபெற்ற மணிமண்டபம் மற்றும் சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ். அழகிரி அவர்களுக்கும் மற்றதலைவர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

h. vasanthakumar Vijay Vasanth
இதையும் படியுங்கள்
Subscribe