கல்லூரிகளில் சில உணவு பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை அதிரடியாக உத்தரவு போட்டது. சென்னை எத்திராஜ் கல்லூரியில் உணவுபொருள் பாதுகாப்புத் துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில் தமிழக உணவுபொருள் பாதுகாப்புத்துறை கூடுதல் ஆணையர் வனஜா தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய வனஜா, எந்த மாதிரி உணவுகள் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பது குறித்து கலந்துரையாடினார்.

Advertisment

samosa

குறிப்பாக கல்லூரி கேண்டீன்களில் உடலுக்கு கேடு விளைவிக்கும் சமோசா, குர்குரே, லேஸ், கலர் கலந்த காலிபிளவர் பக்கோடா, மற்றும் துரித உணவு வகைகள் விற்பதை அனுமதிக்க கூடாது என்று கல்லூரி நிர்வாகங்களை கேட்டுக் கொண்டார். இதனையடுத்து மாணவ, மாணவிகளின் உடலுக்கு கேடு விளைவிக்கும் சமோசா, குர்குரே, லேஸ், கலர் கலந்த காலிபிளவர் பக்கோடா, மற்றும் துரித உணவு வகைகள் விற்பதை அனுமதிக்க கூடாது என்று கல்லூரி நிர்வாகங்களை கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி விற்பனை செய்யும் கேண்டீன் நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.