நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

Advertisment

tamilnadu co operative ration shop employees incentives

கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் குழு ஒரு குடும்ப அட்டைக்கு ரூபாய் 1 வீதம் ஊக்கத்தொகை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதேபோல் சேவை திட்டங்கள் அறிவிக்கும்போது ஒரு குடும்ப அட்டைக்கு 50 காசுகள் வீதம் வழங்கலாம் என்ற முடிவை செயல்படுத்த அரசுக்கு பதிவாளர் குழு அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஒவ்வொரு சிறப்புச் சேவை திட்டம் செயல்படுத்தும் போது உத்தேசமாக ரூபாய் 1.83 கோடி செலவாகும் என்று பரிந்துரை குழு தெரிவித்துள்ளது.

இதையடுத்து கூட்டுறவு சங்கங்களுக்கு அறிவுரைகள் வழங்குமாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.