மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், கரோனா தொற்று காரணமாக கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்த இயலாத சூழல் உள்ளது. செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவெடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். செமஸ்டர் தேர்வு குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.