tamilnadu cm pressmeet nivar cyclone heavy rains

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் சென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். அப்போது, ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து குறித்தும், மதகுகளின் உறுதித்தன்மை குறித்த விவரங்களையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

Advertisment

அதன் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "நிவர் புயல் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 13 மாவட்டங்களுக்கு நாளை (26/11/2020) பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்துள்ளனர்" என்றார்.

Advertisment

புயல் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (26/11/2020) 13 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.