கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்கக்கோரி கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், 'கர்நாடக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ள தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கர்நாடகாவில் தமிழ் வழியாக கல்வி கற்கும் தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்க வேண்டும். கர்நாடகாவில் அண்மையில் மூடப்பட்ட தமிழ் வழிப்பள்ளிகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய தமிழ் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கவும்' தமிழக முதல்வர்கோரிக்கை விடுத்துள்ளார்.