tamilnadu cm palanisamy visit vellore district discussion coronavirus prevention

Advertisment

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்ட வளர்ச்சிபணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி இன்று (20/08/2020) ஆய்வு செய்கிறார்.

கரோனா தடுப்பு உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த பின், விவசாயிகள், தொழில்துறையினருடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். அதன் தொடர்ச்சியாக பிற்பகலில் தருமபுரியில் மாவட்ட வளர்ச்சிபணிகள், கரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்யவுள்ளார்.

கோவை, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி ஏற்கனவே ஆய்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.