Advertisment

விநாயகர் சதுர்த்தி- முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

tamilnadu cm palanisamy vinayagar chaturthi greeting to peoples

நாளை (22/08/2020) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "முழு முதற்கடவுளான விநாயக பெருமானின் அவதாரத் திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்களில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து, அருகம்புல், எருக்கம் பூ, செம்பருத்திப் பூ, அரளி மலர், வில்வ இலை போன்றவைகளைக் கொண்டு மாலைகள் சூட்டி, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல், கரும்பு, பழங்கள், போன்றவற்றை படைத்து, பக்தியுடன் வழிபட்டு, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்வார்கள்.

Advertisment

கணங்களின் தலைவனான விநாயக பெருமானின் திருவருளால், மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று, மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் என வாழ்த்தி, அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கி கொள்கிறேன்". இவ்வாறு முதல்வர் வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

cm palanisamy Tamilnadu vinayagar chaturthi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe