சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரனின் நினைவு நாளையொட்டி, தமிழக முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், 'இமானுவேல் சேகரனின் நினைவு நாளில், அவரது சமூக பற்றையும், தியாகங்களையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன். சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க குரல் கொடுத்தவர் இமானுவேல் சேகரன்" என்று புகழாரம் சூட்டினார்.