தமிழக முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "மருத்துவர்களின் அர்ப்பணிப்பிற்கு மரியாதையளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும். மருத்துவர்களை நல்லடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பது மிகுந்த மனவருத்தமளிக்கிறது. கரோனாவிலிருந்து நம்மைக் காக்கப் போராடியவர்களை இழந்திருக்கும் நேரத்தில் எதிர்ப்பு தெரிவிப்பது வருத்தம் தருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

TAMILNADU CM PALANISAMY TWEET DOCTOR CORONAVIRUS

அதேபோல் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், "நமக்காக உயிரைப் பணயம் வைத்து போராடிய மருத்துவர்களின் அர்ப்பணிப்பிற்குத் தலைவணங்கி மனிதநேயம் காக்க வேண்டும். மருத்துவர்களை நல்லடக்கம் செய்வதில் எதிர்ப்பு தெரிவிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

TAMILNADU CM PALANISAMY TWEET DOCTOR CORONAVIRUS

Advertisment

இதனிடையே சென்னையில் கரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம் பாயும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.