தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மூன்று ஆண்டை கடந்து 4- ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இதையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் வந்த முதல்வர், துணை முதல்வரை பூங்கோத்து கொடுத்து அதிமுகவினர் வரவேற்றனர். பின்பு தனது தலைமையிலான அதிமுக அரசு 4- ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதையொட்டி தொண்டர்களுக்கு முதல்வர் லட்டு வழங்கினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CM5333.jpg)
அதைத் தொடர்ந்து தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் கட்சி வளர்ச்சி மற்றும் தேர்தல் பணி குறித்து முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தேனி, அரியலூர், கோவை, திருப்பூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CM4.jpg)
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் 2017- ஆம் ஆண்டு பிப்ரவரி 16- ஆம் தேதி தமிழகத்தின் 13- வது முதல்வராக பழனிசாமி பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us