தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், பிற களப்பணியாளர்கள் அச்சப்பட தேவையில்லை.ஏற்கனவே நடந்தது போல் நடக்காமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு எடுக்கும். தன்னலம் கருதாமல் மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு இன்னுயிரைத் துறப்போருக்கு தகுந்த மரியாதையைத் தாருங்கள். தகுந்த மரியாதையை அளிக்கும் விதத்தில் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். கரோனாவால் இறப்போரின் உடலை உரிய பாதுகாப்பு நெறிமுறைகளுடன் அடக்கம் செய்ய ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனாவால் இறந்தோரின் இறுதிச்சடங்கின்போது நடந்த சம்பவங்கள் வருத்தம், வேதனை அளிக்கிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
'மருத்துவர்கள் அச்சப்படத் தேவையில்லை'- முதல்வர் பழனிசாமி!
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-04/c1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-04/c2.jpg)