"பெற்றோர் கருத்து அடிப்படையில் பள்ளிகள் திறப்பு" -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி!

tamilnadu cm palanisamy press meet at thoothukudi

தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த பின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது; "தமிழகத்தில் கரோனா பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்கு தேவையான வசதிகள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 2.24 லட்சம் பேரிடம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவிவதைத் தடுக்க மாவட்டந்தோறும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

பெற்றோர்கள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகளை தற்போது திறந்தால் கரோனா பரவும் என சிலர் அச்சம் தெரிவித்தனர். நீர் மேலாண்மை திட்டத்தில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. நீர் பற்றாக்குறையை சமாளிக்க பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. சென்னை மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விவசாயம் பற்றி தெரியாத ஸ்டாலினுக்கு எப்படி போலி விவசாயி, உண்மையான விவசாயி என தெரியும். எனக்கு விவசாயம் தெரியும்; ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? விவசாயி என்ற சான்றிதழை அவர் தர தேவையில்லை. முதலமைச்சராக இருக்கும் போதும் கூட விவசாயத்தை தொடர்ந்து வருகிறேன். நான் சிறுவயது முதலே எவ்வளவு கடின உழைப்பாளி என்பது என் ஊர் மக்களைக் கேட்டால் தெரியும்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் வருவதற்கு ஸ்டாலின் தான் காரணம். எல்லாவற்றையும் தி.மு.க. செய்து விட்டு பழியை மட்டும் அ.தி.மு.க. மீது போடுகிறார்கள். தூத்துக்குடி துறைமுகத்தை நவீன மயமாக்க மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்" இவ்வாறு முதல்வர் கூறினார்.

cm edappadi palanisamy PRESS MEET Tamilnadu Thoothukudi
இதையும் படியுங்கள்
Subscribe