தமிழக அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 59 ஆக உயர்வு!- முதல்வர் பழனிசாமி உத்தரவு!

tamilnadu cm palanisamy order government employees

தமிழக அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 58- இல் இருந்து 59 ஆக உயர்த்தி தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக அரசின் பணியாளர்களின் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58- இல் இருந்து 59 வயதாக உயர்த்தி முதல்வர் ஆணையிட்டுள்ளார். இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த ஆணை உடனே அமலுக்கு வரும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

cm palanisamy employees government Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe