/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mk stalin (5)_4.jpg)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93 வயது) உடல் நலக்குறைவால் காலமானார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து, முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் உடலுக்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர்.
முதல்வரின் தாயார் மறைவுக்குப்பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக தி.மு.கதலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் முதல்வர் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வரின் தாயார் மறைந்தார் என்ற துயரச் செய்திக் கேட்டு மனவேதனைக்கு உள்ளானேன்' எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)