Advertisment

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமானார்!

tamilnadu cm palanisamy mother incident

Advertisment

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93 வயது) உடல் நலக்குறைவால் காலமானார்.

சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிர் பிரிந்தது. இன்று (13/10/2020) காலை 09.00 மணியளவில் சிலுவம்பாளையத்தில் தவுசாயம்மாள் உடலுக்கு இறுதிச்சடங்கு நடக்கிறது. தவுசாயம்மாளுக்கு பழனிசாமியுடன் கோவிந்தராஜ் என்ற மகனும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் உடலுக்கு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், உறவினர்களும் அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

இதனிடையே, இன்று தூத்துக்குடி, நாளை விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

mother cm palanisamy Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe