ADVERTISEMENT

"தமிழகத்திற்கு கூடுதலாக ரூ.1,000 கோடி நிதி வேண்டும்" - பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை!

04:59 PM Apr 11, 2020 | Anonymous (not verified)

தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, தமிழகத்திற்கு உடனடியாக ரூ. 1,000 கோடியை ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

ADVERTISEMENT



இன்று கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் பிரதமர் மோடி கணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், பிரதமர் உட்பட அனைத்து மாநில முதலமைச்சர்களும் முககவசம் அணிந்தபடி பங்கேற்றனர். இதில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT



கரோனா தடுப்பு பணிகளுக்கு தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.510 கோடியை ஒதுக்கியுள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்திற்கு மேலும் ரூ. 1000 கோடியை ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் இன்று மாலை, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT