tamilnadu cm palanisamy migrant workers

Advertisment

தமிழகத்தில் மீதமுள்ள வெளிமாநிலத்தொழிலாளர்களை ஒரு வாரத்திற்குள் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரியும் வெளி மாநிலத் தொழிலாளர்களை விருப்பத்தின் அடிப்படையில், அவரவர் மாநிலங்களுக்கு, சம்மந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன், படிப்படியாக அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு அனைத்து விதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

tamilnadu cm palanisamy migrant workers

Advertisment

இதுவரை 9 ஆயிரம் தொழிலாளர்கள் சம்மந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் 8 ரயில்களில் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள வெளி மாநிலத்தொழிலாளர்களும் சம்மந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் ரயில்கள் மூலம் அவரவர் மாநிலங்களுக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, அதுவரை வெளி மாநிலத் தொழிலாளர்கள் முகாம்களிலேயே தங்கியிருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.