இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி!

tamilnadu cm palanisamy meet with governor

தமிழக முதல்வர் பழனிசாமி இன்று (08/09/2020) மாலை 05.00 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார். கரோனா தொடர்பான நடவடிக்கை பற்றி ஏற்கனவே விளக்கம் அளித்த நிலையில் மீண்டும் சந்திக்கிறார்.

மேலும், வரும் செப்டம்பர் 14- ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வருடன் தலைமைச் செயலர் சண்முகம், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநரை சந்திக்கவுள்ளனர்.

cm palanisamy Governor Panwarilal Purohit Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe