TAMILNADU CM PALANISAMY MEET DEPUTY CM AT HOSPITAL

Advertisment

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக துணை முதல்வர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவப் பரிசோதனை முடிந்து பிற்பகல் 02.00 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனத் தகவல் கூறுகின்றன.

இந்த நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக தமிழக முதல்வர் பழனிசாமி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். முதலில் ஓ.பி.எஸ்.சை சந்தித்து உடல்நலம் விசாரித்தமுதல்வர், ஓ.பி.எஸ்.சின் மருத்துவப் பரிசோதனை தொடர்பான விவரத்தை மருத்துவர்களுடன் கேட்டறிந்தார். அப்போது முதல்வருடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், துணை முதல்வரின் மகனும், தேனி மக்களவை தொகுதி உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் ஆகியோர் உடனிருந்ததாகத் தகவல் கூறுகின்றன.