உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 2,902 ஆகவும், இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆகவும் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

 Tamilnadu cM palanisamy has ordered that shops selling essential Time control

Advertisment

ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் மளிகை கடைகள், காய்கறிகடைகள் ஆகியவை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கடைகள் மதியம் 2.30 மணி வரை மட்டுமே இருக்கும் என்று தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு விதித்திருந்தது. தற்போது ஒன்றரை மணி நேரத்தை குறைத்து, நாளை முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் திறந்திருக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய உத்தரவைபிறப்பித்துள்ளார்.