/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cmo9_0.jpg)
சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் நாளையுடன் 8-ஆம் கட்ட ஊரடங்கு முடிவடையில் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், தியேட்டர்கள் திறப்பது, பள்ளி- கல்லூரிகளை திறப்பது, தனியார் பேருந்து சேவை மற்றும் புறநகர் ரயில் சேவையை தொடங்குவது, உள்ளிட்டவை குறித்து முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனையில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பல்வேறு துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இன்று (29/09/2020) காலை மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் 24- ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)