/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CM555_0.jpg)
சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று (08/09/2020) காலை 10.00 மணிக்கு முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில்அதற்கேற்ப மருத்துவ வசதிகளை அதிகரிப்பது குறித்தும், தளர்வுகளால் கரோனா அதிகரித்தால் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)