மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!

TAMILNADU CM PALANISAMY DISCUSSION WITH DISTRICT COLLECTORS

தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு அக்டோபர் 31- ஆம் தேதியுடன் முடியும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், திரையரங்குகள் திறப்பு உள்ளிட்டவை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்த அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசிக்க உள்ளார். ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவின் கருத்துகள் அடிப்படையில் தமிழக அரசு மேலும் சில தளர்வுகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

cm edappadi palanisamy coronavirus discussion lockdown Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe