Advertisment

மருத்துவர் சைமனின் மனைவிக்கு முதல்வர் போனில் ஆறுதல்!

கரோனாவால் இறந்த மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்திக்கு தொலைப்பேசியில் ஆறுதல் கூறினார் தமிழக முதல்வர் பழனிசாமி.

Advertisment

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்று சுமார் 12:30 மணியளவில் கரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் துணைவியார் ஆனந்தி சைமனைதொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினேன். அவர்களது மகன் மற்றும் மகள் ஆகியோரின் எதிர்கால நலன் கருதி தைரியமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

tamilnadu cm palanisamy conversation

இதனிடையே ஆனந்தி சைமன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கீழ்ப்பாக்கம் கல்லறையில் தனது கணவரின் உடலை மறு அடக்கம் செய்ய கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

conversation cm palanisamy Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe