Skip to main content

கரோனா விவகாரம்: ஸ்டாலின் மீது தமிழக முதல்வர் குற்றச்சாட்டு!

Published on 11/04/2020 | Edited on 11/04/2020

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை விவகாரத்தில், எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் என்றும், சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

 

  TamilNadu CM Palanisamy Condemned DMK Stalin



இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறுவது வருத்தமளிக்கிறது. 

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் இணையதளத்தில் ஒளிவுமறைவு இன்றி வெளியிடப்படுகிறது. ஸ்டாலின் குற்றச்சாட்டு, அவரது சந்தர்ப்பவாத அரசியலை காட்டுகிறது. ஸ்டாலின் கருத்து கரோனா தடுப்பு நடவடிக்கையில் தன்னலமற்று பணியாற்றுவோர்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.  

 

சார்ந்த செய்திகள்