Advertisment

தமிழக முதலமைச்சரின் புதிய அறிவிப்புகள் !

வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கான புதிய அறிவிப்புகளைத் தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

Advertisment

அதில் "வியாபாரிகள் 1 சதவீதச் சந்தைகட்டணத்தை ஏப்ரல் 30- ஆம் தேதி வரை செலுத்த வேண்டியதில்லை. விளைபொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யும் போது வியாபாரிகளிடம் பெறும் 1% சந்தைகட்டணம் ரத்து.விவசாயிகளிடம் பயன்பாட்டு கட்டணத் தொகையும் ஏப்ரல் 30- ஆம் தேதி வரை வசூலிக்கப்படாது.குளிர்பதன கிடங்குகளில் காய்கறி, பழங்களைச் சேமித்து வைப்பதற்கான கட்டணத்தை அரசே ஏற்கும்.

tamilnadu cm palanisamy announced

காய்கள், பழங்களை நேரடியாகக் கொள்முதல் செய்ய முன் வரும் உழவர், உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூபாய் 10 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.காய்கறிகள், பழங்கள், தடையின்றிக் கிடைக்கக் கூடுதலாக 500 நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்" உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது.

Advertisment

மேலும் விளைப் பொருட்களை விற்பனை செய்வதில் சிக்கல் இருந்தால் வேளாண் துணை இயக்குநரையும்,மாவட்ட வேளாண் துணை இயக்குநரையும் (வேளாண் வணிகம்) தொடர்பு கொள்ளலாம்.மாநில அளவில் 044-22253884, 044-22253885, 044-22253496, 9500091904-ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Announcement cm palanisamy Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe