Advertisment

'தமிழகத்தில் இரவு 10.00 மணி வரை கடைகள் திறந்திருக்கலாம்' - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

tamilnadu cm palanisamy announced shops opening timing extend

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, தமிழகத்தில் நாளை (22/10/2020) முதல் இரவு 10.00 மணி வரை கடைகள் திறந்திருக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'எதிர்வரும் பண்டிகைக் காலத்தினைக் கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மேலும் மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தைக் கருத்தில் கொண்டும், நோய்த் தொற்றின் தன்மையைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் முழுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளைத்தவிர மற்ற பகுதிகளில் அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் தேநீர்கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் 22/10/2020 முதல் இரவு 10.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகின்றன.

Advertisment

தமிழக அரசு எடுத்துவரும் சீரிய நடவடிக்கைகளாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பாலும், நோய்த் தொற்றின் பரவல் தொடர்ந்து குறைந்து வரும்,இந்த சூழ்நிலை நீடிக்க, எதிர்வரும்பண்டிகைக் காலங்களில், நோய்த் தொற்று அதிகரிக்காமல் தடுக்க,கடைகள், பொது இடங்களில் அதிகம் கூடுவதைத் தவிர்க்கவும்; முகக்கவசம் அணிவதையும், குறைந்தது 6 அடி இடைவெளி கடைப்பிடிப்பதையும் அடிக்கடி சோப்பின் மூலம் கைகளை கழுவுவதையும், பொதுமக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்'. இவ்வாறு முதல்வர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

cm edappadi palanisamy relaxation lockdown coronavirus Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe