கரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து சிவகங்கை மாவட்டத்தில் வரும் டிசம்பர் 4- ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார். அதேபோல், மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் முதல்வர், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
மேலும், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிற்துறையினர், விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினருடன் முதலவர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாட உள்ளார். ஏற்கனவே சேலம், திருச்சி, கோவை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழக முதல்வர் ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.